தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரி: வெளியேறும் உபரிநீர் 2,000 கனஅடியாக உயர்வு

Published

on

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பகல் ஒன்று முப்பது மணிக்கு உபரி நீர் திறக்கப்படும் என ஏற்கனவே பொதுப்பணித் துறை அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின் நீர்வரத்து அதிகமானதால் உபரி நீரை வெளியேற்ற வேண்டிய கட்டாய நிலை காரணமாக வெளியேறும் உபரி நீரின் அளவு ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் வரை நீர் இழப்பு காரணமாக சென்னையின் முக்கிய இடங்களில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டும் இதே போல் செம்பரம்பாக்கம் ஏரியில் அதிக அளவு நீர் இதன் காரணமாக பல பகுதிகளில் முதல் மாடி வரை மூழ்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version