தமிழ்நாடு

செம்பரப்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு: 2015 போல் வெள்ளம் வருமா?

Published

on

செம்பரப்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கடந்த 2015 போல் வெள்ளம் வருமா? என்ற அச்சம் சென்னை மக்களிடையே எழுந்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக மீண்டும் சென்னையில் கனமழை பெய்து வருவதால் நிரம்பி உள்ள நீர் நிலைகளில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பகல் 1.30 மணிக்கு 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட உள்ளது என பொதுப்பணித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும் என்றும் இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கடந்த 2015ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் திடீரென முன்னறிவிப்பின்றி உபரி நீர் திறந்து விடப்பட்டதால் சென்னை வெள்ளத்தில் மிதந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று ஒரு நிலைமை ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் 2021 ஆம் ஆண்டு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Trending

Exit mobile version