சினிமா செய்திகள்

செக்கச் சிவந்த வானம் திரைப்படம் தோல்வியாம்..!

Published

on

சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த்சாமி, பிரகாஷ்ராஜ் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்கச் சிவந்த வானம் திரைப்படம் தமிழில் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

அதே நேரம் செக்கச் சிவந்த வானம் தெலுங்கில் நவாப் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியான நிலையில் அது எதிர்பார்த்த அளவில் வெற்றிபெறவில்லை என்று கூறுகின்றனர்.

படத்தை வாங்கி வெளியிட்டது மற்றும் விளம்பரத்திற்காகச் செலவு செய்தது என மொத்தம் 5 கோடி ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்திருந்த போதிலும் தெலுங்குவில் பிரகாஷ்ராஜை தவிரப் பிற நடிகர்களுக்குப் பெரிய அளவில் சந்தை இல்லாததே தோல்விக்கான காரணமாம்.

seithichurul

Trending

Exit mobile version