விமர்சனம்

‘செக்கச் சிவந்த வானம்’ திரை விமர்சனம்!

Published

on

சென்னையின் மிகப் பெரிய தாதா பிரகாஷ் ராஜ், அவருக்கு எதிரான மற்றோறு தாதா தியாகராஜன். இருவருக்கும் இடையில் போட்டி. இதற்கிடையில் வெடிகுண்டு வைத்துப் பிரகாஷ் ராஜை கொலை செய்ய முயல்கின்றனர்.

அதில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிறார். தனது தந்தையைக் கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டு இருப்பதை அறிந்து அரவிந்சாமி, அருண் விஜய், சிம்பு என மூன்று மகன்களும் அதிர்ச்சி அடைகின்றனர்.

சென்னையில் பிரகாஷ்ராஜுடன் உள்ள அரவிந்த் சாமி, துபாயில் பிஸ்னஸ் மேனாக இருக்கும் அருண் விஜய், வெளிநாட்டில் உள்ள சிம்பு அனைவரும் ஒன்று சேர்ந்து தனது தந்தையை யார் கொன்றார்கள் என்று கண்டுபிடிக்க முயல்கின்றனர். அரவிந்த் சாமியின் நண்பன் மற்றும் காவல் துறை அதிகாரியாக விஜய் சேதுபதி.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிரகாஷ்ராஜ் இறக்கிறார். அடுத்து யார் சேனாபதி என்பதில் போட்டி. மூவரில் யார் இதில் வென்றார்கள், சேனாபதி ஆனார்கள் என்பது திரைக்கதை.

முதல் பாதியில் நிதானமாகச் சென்ற திரைக்கதை இரண்டாம் பாதியில் மின்னல் வேகத்தில் பாய்கிறது. இதற்கிடையில் வசனங்களில் நகைச்சுவை அனைவரையும் சிரிக்க வைக்கிறது.

தந்தையைக் கொலை முயற்சி செய்துள்ளார்கள் என்று தெரிந்ததும் நான் அங்க வருனுமா என்று கேட்கும் இடத்திலும், தனது காதலி இறப்பைக் கண்டு அழும் இடத்திலும் சிம்புக்கு நிகர் வேறு யாருமில்லை.

துபாய் பிஸ்னஸ் மேன், பிரகாஷ்ராஜ் இடத்தினைப் பிடிக்கத் துடிப்பது, அரவிந்த்சாமியுடன் சண்டை என அருண் விஜய் மிரட்டுகிறார்.

அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, ஜோதிகா, தியாகராஜன் என அனைவரும் தங்களது கதாப்பாத்திரத்தினைச் சிறப்பாகச் செய்துள்ளனர். விஜய் சேதுபதிக்கு நிகர் வேறு யாருமில்லை என்று மீண்டும் நிறுபித்துள்ளார்.

தனது மகன்களில் ஒருவன் தான் தன்னைக் கொல்ல முயன்றது என மனைவியிடம் பிராஷ்ராஜ் கூறுவது மிகப் பெரிய டிவிஸ்ட். பாடல், பின்னணி இசை என அனைத்திலும் ஏ ஆர் ரகுமான் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.

மணிரத்தினம் மீண்டும் தான் இளம் இயக்குநர்களுக்குப் போட்டி தான் என்பதை நிருபித்துள்ளார். மொத்தத்தில் செக்கச் சிவந்த வானம் ரத்தத்தில் மிதந்தாலும் செம என்று கூற வைக்கிறது.

seithichurul

Trending

Exit mobile version