சினிமா செய்திகள்

குக் வித் கோமாளி செஃப் தாமு நீங்களுமா? அரபிக்குத்து பாடலுக்கு செம ஆட்டம்!

Published

on

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றும் செப் தாமு அரபி குத்துபாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் நடித்து முடித்துள்ள பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடல் யூ டியூபில் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி சமந்தா, பூஜா ஹெக்டே, கீர்த்தி சுரேஷ் உள்பட பல திரையுலக பிரபலங்கள் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாக என்பதை ஏற்கனவே பார்த்தோம் .

இந்த நிலையில் அரபிக்குத்து பாடலுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வரும் செப் தாமு நடனமாடிய வீடியோ வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

கடந்த 3 சீசன்களாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் குக் வித் கோமாளி சீசனில் நடுவராக இருந்து வரும் செப் தாமு ஏற்கனவே பல்வேறு சமையல் வீடியோக்களை யூட்யூபில் பதிவு செய்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version