இந்தியா

பழைய காசோலைகள் ஏப்ரல் 1 முதல் செல்லாதா? திடீர் திருப்பம்

Published

on

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இணைக்கப்பட்ட ஒரு சில வங்கிகளில் காசோலைகள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகும் அந்த காசோலைகள் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் எடுத்தது என்பது தெரிந்ததே. அதன்படி ஓரியண்டல் வங்கி, யுனைடெட் இந்தியா வங்கி ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடனும் இணைக்கப்பட்டன. மேலும் அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும் ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியுடனும் இணைக்கப்பட்டது.

இந்த நிலையில் இணைக்கப்பட்ட வங்கிகளின் பழைய காசோலைகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செல்லாது என தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து மார்ச் 31-ஆம் தேதிக்குள் இணைக்கப்பட்ட புதிய வங்கிக் காசோலைகளை பெற்றுக் கொள்ளும்படி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக தற்போது வந்துள்ள தகவல்படி புதிய வங்கிகளின் காசோலைகளை பெற்றுக்கொள்ளும்படி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் பழைய காசோலைகளும் செல்லும் என்றும் அதற்கு இன்னும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இணைக்கப்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர். இருப்பினும் விரைவில் இந்த காசோலைகள் செல்லாமல் போகும் என்றும் அதற்குள் புதிய வங்கியின் காசோலைகளை பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version