இந்தியா

முதலமைச்சரின் 86 வயது தந்தை அதிரடி கைது: பிராமணர்கள் குறித்து சர்ச்சை பேச்சு!

Published

on

பிராமணர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முதலமைச்சரின் 86 வயது தந்தை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிராமணர்கள் குறித்து அரசியல்வாதிகள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்கள் என்பதும் இதற்கு பெரிய அளவில் பிராமணர்களிடம் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சத்தீஷ்கர் மாநிலத்தின் முதலமைச்சர் பூபேஷ் பாகல் அவர்களின் 86 வயது தந்தை நந்த்குமார் பாகல் அவர்கள் பிராமணர்களுக்கு எதிராக அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளார். பிராமணர்கள் வெளிநாட்டினர் என்றும் அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் பிராமணர்களை கிராமங்களுக்குள் நுழைய விடாதீர்கள் என்றும் அவர் கூறியதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நிலையில் அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு முதலமைச்சரின் தந்தையே சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும் அதற்கு அதிரடியாக போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்ததும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து முதல்வர் விளக்கம் அளிக்கையில் சட்டம் மிகவும் உயர்ந்தது என்றும், யாராக இருந்தாலும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை எனது தந்தையாக இருந்தாலும் சத்தீஸ்கர் அரசாங்கம் ஒவ்வொரு மதத்தையும் சமூகத்தையும் உணர்வுகளையும் மதிக்கிறது என்பதை குறிப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக எனது தந்தையை பேசியது வகுப்புவாத அமைதியை சீர்குலைத்துள்ளது. அவருடைய கருத்துக்காக நானும் வருகிறேன் என்று கூறியுள்ளார். முதலமைச்சரின் தந்தையே சர்ச்சைக்குரிய பேசியதன் காரணமாக கைது செய்யப்பட்ட சம்பவம் சத்தீஷ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version