தமிழ்நாடு

ஆண்கள் விபச்சாரம் செய்ய உரிமை வேண்டும்: சாருஹாசன் சர்ச்சை கருத்து!

Published

on

நடிகரும், நடிகர் கமல்ஹாசனின் அண்ணனுமான சாருஹாசன் சபரிமலை விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இதில் அவர் சபரிமலையுடன் ஒப்பிட்டு ஒன்றும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதியில்லை என்பது மரபாக இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் உச்சநீதிமன்றம் இதனை மாற்றி பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் மோதி வருகின்றனர்.

இந்நிலையில் கமல்ஹாசனின் அண்ணன் நடிகர் சாருஹாசன் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ஒரு தவறான சமத்துவம். சபரிமலைக்கு செல்வதில் கேட்கப்படும் சமத்துவம், பெண்கள் ஆண்களின் பொதுக் கழிப்பறையில் உட்காரும் உரிமை கேட்பது போன்றது. ஏன் புகை பிடிப்பதிலும் தண்ணி அடிப்பதிலும் சமத்துவம் கேட்பதில்லை? அதையெல்லாம் கேட்டால் நாங்கள் ஆண் விபசார உரிமை கேட்போம் என பதிவிட்டுள்ளார்.

இதில் சாருஹாசன் சபரிமலை விவகாரத்தில் பெண்கள் செல்லக்கூடாது என ஆதரவு தெரிவித்திருந்தாலும் அவர் சபரிமலையை ஆண்கள் செல்லும் பொதுக்கழிப்பறையுடன் ஒப்பிட்டு பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version