வேலைவாய்ப்பு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத்தில் ”பட்டய கணக்காளர்”வேலை!

Published

on

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத்தில் காலியிடங்கள் 01 உள்ளது. இதில் பட்டய கணக்காளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
வரும் 28 ம் தேதி நேர்முகத் தேர்வு உள்ளது.

நிறுவனம்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR-Indian Council of Medical Research)

வேலை செய்யும் இடம்: தில்லி

வேலை: பட்டய கணக்காளர்- 01

கல்வித்தகுதி: வணிகத் துறையில் இளங்கலை பட்டம் மற்றும் இந்தியப் பட்டய கணக்காளர் நிறுவனத்தால் பெறப்பட்ட பட்டய கணக்காளர் (சிஏ) முடித்திருக்க வேண்டும். கணினி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும். அரசு கணக்கியல் மற்றும் தணிக்கை முறைகளைக் கையாள்வதில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது: 18 முதல் 40 வரை இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.60,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 28.02.2020 அன்று காலை 10 மணி முதல்

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: The V. Ramalingaswami Bhawan, P.O. Box No. 4911, Ansari Nagar, New Delhi – 110029, India

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.icmr.nic.in/sites/default/files/career_opportunity/Advertisement18022020.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

seithichurul

Trending

Exit mobile version