சினிமா செய்திகள்

சார்லி சாப்ளின் 2 டிரைலர் ரிலீஸ்!

Published

on

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு, பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள சார்லி சாப்ளின் 2 டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சின்னமச்சான் பாடல் யூடியூபில் பயங்கர ஹிட்டான நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் எகிறி இருந்தன. தற்போது, அந்த படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

இயக்குநர் தினகரன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகத்தை சுமார் 17 ஆண்டுகள் கழித்து இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார்.

வரும் ஜன.,25ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. சின்னமச்சான் பாடலை தவிர படத்தின் காட்சிகள் பெரும்பாலும் டிரைலரிலேயே ரசிக்கும் படியாக இல்லாதது போன்று தான் தோன்றுகிறது.

இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். டிரைலரில் பிரபுதேவாவுக்கு பில்டப் கொடுக்கும் குரலுக்கு சொந்தக்காரர் நம்ம தமிழ்படம் சிவா தான்.

seithichurul

Trending

Exit mobile version