விமர்சனம்

சார்லி சாப்ளின்2 விமர்சனம்!

Published

on

பிரபுதேவா கால்ஷீட் கிடைத்து விட்டது என்ற ஒரே காரணத்திற்காக ஷக்தி சிதம்பரம் இயக்கிய படம் தான் இந்த சார்லி சாப்ளின் 2.

2002ம் ஆண்டு வெளியான முதல் பாகத்தை தினகரன் என்பவர் இயக்கியிருந்தார். அந்த படமே காட்டு மொக்கை. இதில், இதன் இரண்டாம் பாகத்தை 17 வருடங்கள் கழித்து இப்போது ஏன் எடுத்தார்கள் என்பது தயாரிப்பாளருக்கே வெளிச்சம்.

சின்ன மச்சான் செல்ல மச்சான் என்ற ஒரு பாடலுக்கு ஆசைப்பட்டு தியேட்டருக்கு போய் படத்தை பார்க்க துணிவிருந்தால் தாராளமாய் போய் பார்க்கலாம்.

இன்னும் கொஞ்ச நாளில் அதுவும் யூடியூபில் வெளியாகி விடும் என்பது வேறு கதை.

சரி படத்தின் கதை தான் என்ன என கேட்பவர்களுக்கு படத்தின் கதை இதோ..

முதல் பாகத்தில், தற்கொலைக்கு முயற்சி செய்கிறார் பிரபுதேவா என தவறாக நினைத்துக் கொண்டு அவரை காப்பாத்த துடிக்கும் காயத்ரி ஜெயராம் கதாபாத்திரம் போலவே, நாயகி நிக்கி கல்ரானிக்கு இந்த படத்தில் ரோல் கொடுத்துள்ளார். முதல் பாகத்தில் பிரபு ஒரு ஹீரோவாகவும், பிரபுதேவா மற்றொரு ஹீரோ என டபுள் ஹீரோ சப்ஜெக்டாக வந்தது. ஆனால், இந்த படத்தில் நாயகியின் அப்பாவாக பிரபு நடித்துள்ளார்.

இதுக்குமேலயும் பிரபுவை ஹீரோவா பார்க்க டைரக்டர்கே முடியல போல.

மேட்ரிமோனியில் வேலை செய்யும் பிரபுதேவாவுக்கு நிக்கி கல்ரானி மேல் காதல் ஏற்படுகிறது. முதலில் மோதலில் தொடங்கி பின்னர் காதலில் முடியும் அதே பழைய டெம்ப்ளேட் இங்கையும் காப்பி பேஸ்ட். சமீபத்தில், விஸ்வாசத்திலும் அதே தான்.

கடலில் ஒருவரை காப்பாற்ற நிக்கி கல்ரானி வாய் வைத்து உறியும் வீடியோவை எடிட் செய்து கல்யாணத்திற்கு முன்னர் பிரபுதேவாவுக்கு பார்க்க கிடைக்க.. நிக்கி கல்ரானியை ஆக்ரோஷமாக திட்டி பிரபுதேவா ஒரு வாட்சப் வீடியொவை அனுப்புகிறார்.

ஏன் கால் செய்தோ அல்லது நேரிலையே போய் திட்டவில்லை என கேட்கக் கூடாது.

பின்னர், அவர் காப்பாற்றத்தான் அப்படி செய்தார் என்பதை உணரும் பிரபுதேவா, நிக்கி கல்ரானி அந்த வீடியோவை பார்ப்பதற்கு முன்னர் அழித்து விட காமெடி எனும் பேரில் மரண மொக்கை செய்து ரசிகர்களை இம்சிப்பதுதான் இந்த சார்லி சாப்ளின் 2.

காமெடிக்கு பெயர் போன சார்லி சாப்ளின் பெயரை இரண்டு பாகங்களுக்கும் வைத்து, பாவம் ஏன் சார் அந்த ஜீனியஸ் பெயரை நோகடிக்கிறீங்க.. என அனைவரையும் கேட்க தோன்றுகிறது.

சினி ரேட்டிங்: 1.75/5.

இறுதிச்சுற்று இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா!

செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே மற்றும் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் காப்பான் என சூர்யாவின் இரு படங்களும் ரிலீசுக்கு ரெடியாகியுள்ளன. இந்நிலையில், அடுத்ததாக இறுதிச்சுற்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார்.

மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் பாக்சிங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டு, மாதவனுக்கு கம்பேக் படமாக அமைந்த இறுதிச்சுற்று படத்தை 6 வருடங்களாக செதுக்கி உருவாக்கியவர் சுதா கொங்கரா, அந்த படம் மாபெரும் வெற்றியை பெற்ற பின்னர், அவசரமாக அடுத்த படத்தை எடுக்காமல், பொறுமையாக அடுத்த படத்திற்கான கதையை எழுதி முடித்துள்ளாராம் சுதா, இந்த படத்தை சூர்யாவே தயாரித்து நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் அமெரிக்கா மற்றும் சண்டிகர் போன்ற இடங்களில் நடக்கிறது. அதற்கான லொகேஷன் பார்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

பத்ம விருதுகள்: மோகன்லால், பிரபுதேவாவுக்கு கெளரவம்!

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுக்கு சினிமா துறையில் 40 ஆண்டுகள் நடித்து தன் பங்களிப்பை அளித்ததற்கு கெளரவப்படுத்தும் விதமாக இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளாக சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் மோகன் லால் நடித்துள்ளார். மலையாள திரையுலகை தாண்டி, தமிழ், தெலுங்கு மொழி சினிமாக்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் மோகன் லால். 2001ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது மோகன் லாலுக்கு வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது. மேலும், 5 முறை தேசிய விருது வென்ற பெருமையும் மோகன் லாலுக்கு உண்டு.

அதே போல, இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் நடனப்புயல் பிரபுதேவாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடனக் கலைஞர், ஹீரோ, இயக்குநர் என சினிமாவின் பல ஏரியாக்களிலும் அசத்தி வரும் பிரபுதேவாவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், டிரம்ஸ் சிவமணி, பாடகர் சங்கர் மகாதேவன் மற்றும் பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version