இந்தியா

விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2: இந்தியா சாதனை!

Published

on

நிலாவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோ தயாரித்துள்ள சந்திரயான் 2 விண்கலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான் 2 விண்கலம்.

நிலவின் தென்துருவ மண்டலத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலம் கடந்த 15-ஆம் தேதியே விண்ணில் ஏவப்பட இருந்தது. இதுவரையில் நிலவின் தென்துருவ மண்டலத்தில் எந்த நாடுமே தடம் பதிக்கவில்லை. இதனால் இதில் இந்தியா உலகிற்கே முன்னோடியாக இருக்கும். எனவே இதுவரையில் இஸ்ரோ எடுத்துக்கொண்ட பணிகளிலேயே சந்திரயான் 2 தான் மிகக் கடினமானது.

இதனையடுத்து அனைத்து பணிகளும் நிறைவடைந்து கடந்த 15-ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான் 2-வை விண்ணில் ஏவ அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் சுமார் 2 மணியளவில் இஸ்ரோ ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், விண்கலனை ஏவுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் சில தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சந்திரயான் 2 விண்கலனை ஏவுதல் கைவிடப்படுகிறது. எப்போது விண்கலன் ஏவப்படும் என்ற தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என கூறியது.

விண்கலத்துக்கு எரிபொருளை நிரப்பியபோது இந்த தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இந்நிலையில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இன்று மதியம் 2.43 மணிக்கு சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து, ஜிஎஸ்எல்வி மார்க் III ராக்கெட் மூலம் சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்டதிலிருந்து சரியாக 15 நிமிடங்களில், சந்திரயான் 2 விண்கலம் புவி வட்டபாதையை வெற்றிகரமாக சென்றடைந்தது.

seithichurul

Trending

Exit mobile version