தமிழ்நாடு

பிரேமலதாவின் யோக்கியதை இதுதான்….: திமுக காட்டம்!

Published

on

திமுக தலைவர்களையும், பத்திரிக்கையாளர்களையும் ஒருமையில் பேசி கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிற தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு திமுகவின் சந்திரகுமார் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

தேமுதிக மக்களவை தேர்தலுக்காக திமுக மற்றும் அதிமுக ஆகிய இருகட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதை திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் அம்பலப்படுத்தினார். இது அரசியல் அரங்கில் தேமுதிகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. தேமுதிகவின் இந்த மோசமான அரசியல் அனுகுமுறை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளாது.

இதனையடுத்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது திமுக தலைவர்களையும், செய்தியாளர்களையும் ஒருமையில் பேசி கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளார். இதனையடுத்து திமுகவின் சந்திரகுமார் பிரேமலதாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், கலைஞரை மருத்துவமனையில் சந்திக்க ஸ்டாலின் அனுமதி மறுத்துவிட்டதாகவும் திரும்ப திரும்ப பொய் சொல்கிறார் பிரேமலதா. கேப்டனால் அன்றைய நிலையில் வந்து பார்க்க முடியாத நிலையில் இருந்தார் என்பதுதான் உண்மை. அவர் தடுத்ததாகவே எடுத்துக்கொண்டாலும், சுதீஷுக்கு எப்படி திமுக அனுமதி கொடுத்தது? என கேள்வி எழுப்பினார்.

திமுகவையும், திமுகவினரையும் பிரேமலதா தரக்குறைவாக பேசுகிறார். நானும் ஒருகாலத்தில் தேமுதிகவில் இருந்தவன். அப்படி இருந்தும் சொல்கிறேன். அதைவிட தரங்கெட்ட வார்த்தையில் தேமுதிக என்பதற்கு ஆபாசமாக, அறுவறுக்கத்தக்க வார்த்தையில் அர்த்தம் சொல்ல முடியும். ஆனால், ஒரு அரசியல் இயக்கத்தை பற்றி அப்படியெல்லாம் அநாகரீகமாக பேசக்கூடாது.

எங்கள் வீட்டு வாசலில் க்யூவில் நிற்கிறார்கள். அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று ரொம்ப கேவலமாக பேசிக்கொண்டிருக்கிறார் கேப்டன் மகன். நான் கேட்கிறேன், இன்றைக்கு யார், யார் வீட்டு வாசலில் நிற்கிறார்கள். எங்களுக்கு மறுவாழ்க்கை கொடுங்கள் என்று யார், யாரிடம் காலை பிடித்து பிச்சை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். பிரேமலதாவின் யோக்கியதை இதுதான், சுதீஷின் யோக்கியதை இதுதான் என்று துரைமுருகன் எடுத்துச்சொல்லிவிட்டார். அந்த ஆத்திரத்தில்தான் இப்படி பேசிக்கொண்டிருக்கிறார் பிரேமலதா என்றார் சந்திரகுமார்.

seithichurul

Trending

Exit mobile version