உலகம்

மாபெரும் கூட்டணியை உருவாக்கும் சந்திரபாபு நாயுடு.. பிரதமர் வேட்பாளர் யார் தெரியுமா?

Published

on

டெல்லி: 2019ல் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகள் மிகப்பெரிய கூட்டணி அமைப்பதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது. ஆனால் இந்த அணியில் யார் முன்னிலைபடுத்தப்படுவார் என்று விவாதம் எழுந்துள்ளது.

நேற்று ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நாள் என்று கூட கூறலாம். பாஜகவிற்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டும் வகையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் என்று பல கட்சிகளை சென்று பார்த்தார்.

அதே சமயம் அரசியல் தெரிந்தவர்கள்,  4 முக்கிய தலைவர்களை இந்த பிரதமர் வேட்பாளர் லிஸ்டில் சொல்கிறார்கள். மமதா  பானர்ஜி, ராகுல் காந்தி, மாயாவதி, சந்திரபாபு நாயுடு

ஆகிய நான்கு பேர்தான் இந்த பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்கள். இவர்களுக்குள் ஏற்படும் ஒப்பந்தமும் ஒத்துழைப்பும்தான் கூட்டணிக்கான அஸ்திவாரமாக இருக்கும்.

 

 

 

ReplyForward
seithichurul

Trending

Exit mobile version