தமிழ்நாடு

திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நாற்காலிகள் பறந்திருக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்

Published

on

திமுக பொதுக்குழுக் கூட்டம் இணையதளம் வாயிலாக நடக்காமலிருந்தால், நாற்காலிகள் பறந்திருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை தண்டையர் பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “திமுகவில் குழப்பம் உள்ளதால் தான், இணையதளம் வாயிலாகப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. நாங்கள் மாவட்ட செயலாளர்களுக்கு எல்லா பொறுப்புகளையும் கொடுத்து அழகு பார்த்தவர்கள்.

திமுகவில் எந்த காலத்திலும் அப்படி ஒன்று நடந்ததே கிடையாது. திமுக பொது செயலாளராக துரைமுருகன் பதவியேற்றதற்கு, கு.க. செல்வத்திற்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். கு.க.செல்வம் நீதிமன்றம் செல்லவில்லை என்றால் திமுக பொதுக்குழுக் கூட்டம் என்ற ஒன்று நடைபெற்று இருக்காது. துரைமுருகன் பொதுச்செயலாளராகப் பதவியேற்று இருக்க மாட்டார்.

ஜூம் மூலம் திமுக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தாமல், அனைவரையும் அழைத்து வெளிப்படையாக நேரில் நடத்தி இருந்தால், நாற்காலிகள் பறந்திருக்கும், சட்டைகள் கிழிந்திருக்கும். இதுதான் அந்த பொதுக்குழுக் கூட்டத்தில் நடைபெற்று இருக்க வேண்டிய விஷயங்கள். ஆனால் அதை ஒரு கின்னஸ் சாதனை போல பெருமை பேசிக்கொள்கிறார்கள்” என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் திமுக பொதுக்குழுக் கூட்டத்தை விமர்சித்து இருக்கிறார்.

seithichurul

Trending

Exit mobile version