கிரிக்கெட்

சுழலில் சுருண்டது ஆஸ்திரேலியா: சாஹல் உலக சாதனை!

Published

on

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் 6 விக்கெட்டை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். மேலும் ஆஸ்திரேலிய அணியை 230 ரன்களுக்குள் சுருட்ட உதவியுள்ளார்.

ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ள நிலையில் தொடரை யார் கைப்பற்றுவார் என்பதை தீர்மானிக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணியினரை ரன் குவிக்க விடாமல் திணற வைத்தனர்.

மைதானம் சுழல்பந்துக்கு சாதகமாக இருந்ததால் சாஹல் சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார். 10 ஓவர்கள் வீசிய சாஹல் 42 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற உலக சாதனை இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின்(5-15) கைவசம் இருந்தது. இந்த சாதனையை தற்போது சாஹல் முறியடித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அஜித் அகர்கரின் சாதனையையும் சாஹல் சமன்செய்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version