இந்தியா

இந்தியாவில் ஆப்பிள் ரீடெயில் ஸ்டோர்.. டிம் குக் கொடுத்த செம தகவல்..!

Published

on

இந்தியாவில் தனது முதல் ரீடெயில் ஸ்டோரை திறக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக அந்நிறுவனத்தின் டிம் குக் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஆப்பிள் ஐபோன் உள்பட பல பொருள்கள் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பிரபலம் என்பதும் தெரிந்தது. அது மட்டுமின்றி இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மிகப்பெரிய அளவில் உற்பத்தியாகி வருகிறது என்பதும் இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் ஒரு பில்லியன் மதிப்புள்ள ஸ்மார்ட் ஃபோன்களை ஏற்றுமதி செய்த முதல் நிறுவனம் ஆப்பிள் என்ற பெருமையையும் பெற்றது என்பது தெரிந்ததே.

உலகம் முழுவதும் மூன்று ட்ரில்லியன் டாலர் சந்தையை கொண்டுள்ள முதல் நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனத்திற்கு முக்கிய சந்தையாக இந்தியா உள்ளது என்பதும் இந்தியாவிலிருந்து அந்நிறுவனத்துக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதல் முறையாக ஆப்பிள் ரீடெயில் ஸ்டோரை இந்தியாவில் திறக்க திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிக் குக் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஆப்பிள் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை கூட்டத்தின்போது அவர் பேசிய போது இன்னும் சில நாட்களில் ஆப்பிள் நிறுவனத்தின் ரீடெயில் ஸ்டோரை இந்தியாவில் இறக்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

முன்னணி ஊடகம் ஒன்றின் கருத்தின்படி டெல்லி மற்றும் மும்பை ஆகிய இரண்டு இடங்களில் முதல் கட்டமாக ஆப்பிள் ரீடெயில் ஸ்டோர் திறக்கப்படும் என்றும் மும்பையில் இருக்கும் ரீடெயில் ஸ்டோர் பிரதானமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மும்பை மற்றும் டெல்லி ரீடெயில் ஸ்டோருக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து சென்னை உள்பட இந்தியாவின் பல நகரங்களில் அடுத்தடுத்து ஆப்பிள் ரீடெயில் ஸ்டோர் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் உள்பட ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வரும் நிலையில் இந்தியாவிலேயே ரீடெயில் ஸ்டோர் திறக்கப்பட்டால் அந்நிறுவனத்தின் பொருள்கள் மிகப்பெரிய அளவில் விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version