இந்தியா

கொரோனா தடுப்பூசி பற்றி தவறாக வதந்தி பரப்பினால் குற்றவியல் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

Published

on

கொரோனா தடுப்பூசி குறித்து தவறாக வதந்தி பரப்புவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கோவாக்ஷின், கோவிஷீல்டு இரண்டு தடுப்பூசிகளும் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. இருப்பினும் தடுப்பூசி போட்டதால் வெகு சிலருக்கு வாந்தி, மயக்கம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டன. இதற்கிடையே கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு இல்லாதவை  என்றும் சமூகவலைதளங்களில் சிலர் பதவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி பற்றி தவறான தகவலோ, வதந்தியோ பரப்பினால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்துள்ளது.

ஏற்கெனவே மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்த்ன் தடுப்பூசி குறித்து பேசுகையில்,’உலக நாடுகள் எல்லாம் நம்மிடம் தடுப்பூசி வாங்குகின்றன. ஆனால் நம் நாட்டு மக்கள் அதைப் போட்டுக்கொள்ள தயங்குகிறார்கள்’ என்று வேதனை தெரிவித்திருந்தார்.

Trending

Exit mobile version