இந்தியா

இந்தியாவுக்கு எதிராக சதி செய்யும் யூடியூப் சேனல்கள் முடக்கப்படும்: மத்திய அமைச்சர்!

Published

on

இந்தியாவுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பிய 20 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டதாகவும் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு எதிராகவும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் செயல்படும் எந்த ஒரு யூடியூப் சேனல்கள் ஆக இருந்தாலும் சரி இணையதளங்களாக இருந்தாலும் சரி முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் அவர்கள் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருபவர்கள் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்து இருப்பதாகவும் இந்த நிலையில் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்ட 20 யூடியூப் சேனல்கள் இந்தியா குறித்து தவறான கருத்துக்களை வதந்திகளை பரப்பி வந்ததால் அந்த சேனல்கள் முடக்கப்பட்டதாகும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்கள் கூறியுள்ளார்.

காஷ்மீர் விவகாரம், விவசாயிகள் போராட்டம், ராமர் கோயில் உள்பட இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்து வந்த 20 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டதாகவும் இந்த சேனல்களுக்கு சுமார் 50 கோடி பார்வையாளர்கள் இருக்கிறார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா குறித்து போலியான செய்திகளை தந்து நாட்டிற்கு எதிராக சதி செய்பவர்கள் மீது அரசு தொடர்ந்து கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுவரை 20 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுவது, பொய்களை பரப்புவது, சமூகத்தைப் பிளவு படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடும் யூடியூப் சேனல்களும், இணையதளங்களும் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version