இந்தியா

இந்தியாவில் மின் தடைக்கு வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் உறுதி!

Published

on

இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல மாநிலங்களில் மின்தடை ஏற்படும் என்றும் இருளில் மூழ்கும் என்றும் கூறப்பட்டு வரும் செய்தியை மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்கே சிங் மறுத்துள்ளார்.

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் குறிப்பாக உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி உள்பட ஒரு சில மாநிலங்கள் இருளில் மூழ்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

தமிழகத்திலும் இன்னும் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு இருப்பதாகவும் அதன் பின்னர் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்கே சிங் இந்த செய்தி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தியாவில் மின் தடை ஏற்பட வாய்ப்பில்லை என்றும் நிலக்கரி கையிருப்பு போதுமான அளவு உள்ளதாகவும் நிலக்கரியை அனுப்புவதில் மட்டும் தான் சிக்கல் இருக்கிறது என்றும் என்றும் கூறினார்.

நாடு முழுவதும் மின் உற்பத்தி நிலையங்களில் போதிய நிலக்கரியை உள்ளதால் மின் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அடுத்த 4 நாட்களுக்கு நிலையில் கையிருப்பு தினமும் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி நிரப்பப்பட்டு வருகிறது என்றும் நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், போதுமான அளவு நிலக்கரியை அனுப்புவதாக கோல் இந்தியா நிறுவனம் உறுதி அளித்துள்ளது என்றும் நிலக்கரி பற்றாக்குறை என்பது இன்றுவரை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஊடகங்களில் மின்சார தட்டுப்பாடு வரும் என்று கூறப்பட்டு வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version