இந்தியா

பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு: பொன்முடி கடிதத்திற்கு மத்திய அரசு பதில்!

Published

on

மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மத்திய கல்வி துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் இந்த கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அனுப்பிய கடிதத்தில் கோச்சிங் முறையை ஒழிப்பதை நுழைவுத்தேர்வில் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கு பதிலளித்துள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசிய கல்வி கொள்கை பல்வேறு நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அமல்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அதன் அடிப்படையில்தான் பல்கலைகழக நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் மாணவர்கள் 13 மொழிகளில் பொது நுழைவுத்தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றும் ஒரே விண்ணப்பம் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் கல்வி பயிலவும் கட்டண சுமையை குறைத்து கொள்ள முடியும் என்றும் அமைச்சர் பொன்முடியின் கடிதத்தை மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version