இந்தியா

3 நாடுகளில் புதியவகை கொரோனா வைரஸ்: மத்திய அரசு எச்சரிக்கை!

Published

on

மூன்று நாடுகளில் ஆபத்தான புதிய வகை வைரஸ் பரவி வருவதன் காரணமாக அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் தீவிர சோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் ஆனால் அதே நேரத்தில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதன் காரணமாக பல நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளிலும் ஒரு சில ஆப்பிரிக்க நாடுகளிலும் மூன்றாவது அலை தற்போது தீவிரமாக பரவி வருவதாகவும் எனவே ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்வது கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங் மற்றும் போஸ்ட்வானா ஆகிய நாடுகளில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாகவும் பி.1.1.529 என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த வைரஸ் பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

எனவே தென்னாப்பிரிக்கா,ஹாங்காங் மற்றும் போஸ்ட்வானா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளை மிகவும் தீவிரமாக கண்காணித்து சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version