தமிழ்நாடு

வெள்ள மதிப்பை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்திய குழு!

Published

on

மழை வெள்ளம் குறித்து சேதங்களை ஆய்வு செய்ய மத்திய அரசின் ஆய்வு குழு தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பாக விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பயிர்களை இழந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவதற்காக மத்திய அரசு நிதி வழங்க வேண்டுமென ஏற்கனவே தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் குழு தமிழகம் வருகிறது. வேளாண்மை, நிதி, மின்சாரம், உள்பட 6 அமைச்சரவையை சேர்ந்த அதிகாரிகள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மழை வெள்ள சேதங்களை பார்வையிட வரும் மத்திய குழு குழுவுக்கு உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா அவர்கள் தலைமை தாங்குகிறார்.

இந்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட்டு ஒரு வாரத்தில் மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version