இந்தியா

அடுத்த 4 வாரங்கள் மிகவும் அபாயகரமானது: மத்திய அரசு எச்சரிக்கை

Published

on

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் அடுத்த நான்கு வாரங்கள் மிகவும் அபாயகரமானது என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்தியாவிலுள்ள கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் இன்று 59 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் அடுத்த நான்கு வாரங்கள் மிகவும் அபாயகரமானது என்றும் அதனால் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அனைத்து மாநில சுகாதார துறை அமைச்சகங்ககளும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையின் போது அவர் முதல்வர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அறிவுரைகளை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய அரசு இன்று கொரோனா வைரஸ் குறித்த கட்டுப்பாடுகளையும் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version