இந்தியா

ரேசன் கடைகளில் சிலிண்டர் விற்பனை: மத்திய அரசு தகவல்!

Published

on

ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் தற்போது சிலிண்டர் விற்பனைக்கு என ஏஜென்சிகள் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் மூலம் சிலிண்டர்கள் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சிறியவகை கேஸ் சிலிண்டர்களை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய உணவு மற்றும் பொது விநியோக செயலாளர் சுதான்சு பாண்டே தெரிவித்துள்ளார்

இதுகுறித்து நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தகவலை வெளியிட்ட சுதான்சு பாண்டே சிறிய வகை கேஸ் சிலிண்டர்களை ரேஷன் கடை மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை தொடங்க இருப்பதாகவும், இந்த திட்டத்தில் சேர ஆர்வம் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உடன் இணைந்து செயல்படுவோம் என்றும் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் மாநிலங்களுக்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்

ரேஷன் ரேஷன் கடைகளுக்கு முத்ரா கடன்கள் மூலதன பொருட்களுக்காக வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். ரேஷன் கடைகள் மூலம் சிறிய வகை சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version