இந்தியா

செப். 30 வரை மீண்டும் தடை: மத்திய அரசின் அறிவிப்பால் பயணிகள் அதிருப்தி!

Published

on

செப்டம்பர் 30 வரை சர்வதேச விமானங்களுக்கு மீண்டும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பயணிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது என்பதும் தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உள்நாட்டு விமானப் போக்குவரத்துகள் மட்டும் இயங்கி வருகின்றன என்பதும் வெளிநாட்டு விமானங்கள் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சில நாடுகளுக்கு மட்டும் சிறப்பு விமானங்கள் பயணம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை சர்வதேச விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து இருந்த நிலையில் அந்த தடையை மேலும் ஒரு மாதம் நீட்டித்து செப்டம்பர் 30ஆம் தேதி வரை சர்வதேச விமானங்களுக்கு தடை என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் மூன்றாவது அலை வரும் அக்டோபரில் தோன்றலாம் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் மேலும் ஒரு மாதம் சர்வதேச விமானங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசின் இந்த உத்தரவால் வெளிநாடு செல்லும் விமான பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவின் விமானங்களுக்கு பல நாடுகள் தற்போது அனுமதி அளித்துள்ளன என்பதால் சிறப்பு விமானங்களை கூடுதலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version