இந்தியா

வாட்ஸ் அப்-க்கு பதிலாக மத்திய அரசின் ‘சாண்டீஸ் அப் செயலி: என்னென்ன சிறப்பம்சங்கள்?

Published

on

சமீபத்தில் வாட்ஸ் அப் செயலி திடீரென தனது கொள்கையை மாற்றியது என்பதும் அதனால் வாட்ஸ்அப் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து உலகம் முழுவதும் வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.

இந்த நிலையில் இந்தியர்களுக்காக வாட்ஸ்அப் போன்று தனி செயலி உருவாக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது மத்திய அரசு புதிய செயலி ஒன்றை உருவாக்கி உள்ளது.

சாண்டீஸ் அப் என்ற பெயரைக் கொண்ட புதிய செயலி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் உருவாகி உள்ளது. சாண்டீஸ் அப் என்றால் ஹிந்தியில் மெசேஜ் என்ற பொருள். அதன்படி இந்த செயலி மூலம் மெசேஜ்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை அனுப்பி அனுப்பி கொள்ளலாம்.

இந்த செயலியில் அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டும் என்றால் செல்போன் எண்ணை பதிவு செய்து ஓபன் செய்து கொள்ளலாம். நீங்கள் கொடுக்கும் செல்போன் எண்ணிற்கு ஓடிபி எண் வரும். அந்த ஓடிபி எண்ணை உள்ளீடு செய்தால் உங்கள் பெயரில் ஒரு அக்கவுண்ட் ஓப்பன் ஆகிவிடும். ஒருமுறை ஒரு செல்போன் மூலம் ஒரு அக்கவுண்ட் ஓபன் செய்து விட்டால் அந்த அக்கவுண்டை மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இமெயில் மூலமும் அக்கவுண்ட் ஓபன் செய்யலாம் என்றாலும் அரசாங்க அனுமதி பெற்ற இமெயில் மூலம் மட்டுமே அக்கவுண்ட் ஒப்பன் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ் அப் செயலியில் ஒரு அக்கவுண்டில் எப்போது வேண்டுமானாலும் மொபைல் என்னை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் இதில் அவ்வாறு மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செயலி தற்போது அரசு அதிகாரிகள் தகவல்களை பரிமாறிக்கொள்ள மட்டும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாகவும் விரைவில் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளது

author avatar
seithichurul

Trending

Exit mobile version