தமிழ்நாடு

தமிழத்திற்கு வந்தது 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்: ஒவ்வொரு மாவட்டத்திற்கு எவ்வளவு?

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு இருந்த காரணத்தினால் சென்னை உள்பட பல நகரங்களில் தடுப்பூசி மையம் ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை வலியுறுத்தியது. மேலும் அரசியல் கட்சி தலைவர்களும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று இரவு தமிழகத்திற்கு 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தடுப்பூசிகள் இரவோடு இரவாக அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு உள்ளன என்பதும் இதனை அடுத்து இன்று முதல் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி மையம் செயல்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Also Read: நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 37.60 கோடியை கடந்தது!

தமிழகத்திற்கு வந்துள்ள 5 லட்சம் கோவிலில் தடுப்பூசிகளில் சென்னைக்கு மட்டும் 40 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, பூந்தமல்லி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் மொத்தம் 82 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதேபோல் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு 68,000 தடுப்பூசிகளும் திருச்சி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களுக்கு 49,000 தடுப்பூசிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சென்னைக்கு வந்து உள்ள 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எவ்வளவு தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரத்தை கீழே உள்ள புகைப்படம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

seithichurul

Trending

Exit mobile version