இந்தியா

500 ரூபாய் நோட்டு செல்லாதா? மத்திய அரசு விளக்கம்!

Published

on

ஒரு சில வகை 500 ரூபாய் நோட்டு செல்லாது என இணையதளங்களில் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில் இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் நாடு முழுவதும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் 500 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி அருகே பச்சை கோடு மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் கையெழுத்து அருகே உள்ள கோடு உள்ள இரண்டு வகை நோட்டுகள் செல்லாது என்றும் இந்த இரண்டு வகை 500 ரூபாய் நோட்டுகளும் போலி நோட்டுகள் என்றும் வதந்தி பரவியது.

இந்த வதந்தி காரணமாக பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500 ரூபாய் நோட்டுகளில் அதுபோன்று இருக்கிறதா என்று சோதனை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

500 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி அருகே பச்சை கோடு மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் கையெழுத்து அருகே உள்ள இரண்டு வகை நோட்டுகளும் செல்லும் என்றும் இதுகுறித்து வெளியாகி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த விளக்கத்தை அடுத்து அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version