இந்தியா

டிஜிட்டல் பள்ளி: விளக்கம் அளிக்கும் மத்திய அரசு

Published

on

டிஜிட்டல் வழி கல்வியில் தனது முன்னெடுப்புகள் குறித்து மத்திய அரசை நாட்டு மக்களுக்கு விளக்கமளித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆன்லைன் மூலமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து டிஜிட்டல் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.

இணையத்தின் மூலம் மாணவர்கள் கற்பதன் மூலம் பள்ளி மாணவர்கள் இருக்கும் இடத்திற்கு பள்ளியை எடுத்துச் செல்கிறது என்றும் இதன் மூலம் இடையில் படிப்பை நிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையை வகுத்துள்ள மத்திய அரசு ஆன்லைன் கல்வியை ஊக்குவித்து வருகிறது என்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கு என வாட்ஸ் அப் குழு, யூடியூப் சேனல் குழு, ஆன்லைன் வகுப்புகள், கூகுள் சந்திப்பு போன்ற பல வசதிகளை பயன்படுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

டிஜிட்டல் கல்வியால் வீட்டிலேயே குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்கு தேவையான புதுமையான வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நர்சரி வகுப்புகள் முதல் உயர்நிலை வகுப்புகள் வரை உலகமயமாக்கலின் தற்போதைய சூழலில் டிஜிட்டல் கல்வி அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் கல்வி முயற்சிகள் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியை அளிக்கிறது என்றும் அனைத்து மாநிலங்களில் உள்ள நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கும் டிஜிட்டல் கல்வி நுண்ணறிவை வளர்க்கின்றன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது

seithichurul

Trending

Exit mobile version