இந்தியா

பாஸ்போர்ட் புக் இனி தேவையில்லை: மத்திய அரசு அறிமுகம் செய்யும் இ-பாஸ்போர்ட்!

Published

on

இதுவரை பாஸ்போர்ட்டுகள் புத்தக வடிவில் வழங்கப்பட்டு வரும் நிலையில் இனிமேல் புத்தக வடிவ பாஸ்போர்ட் தேவையில்லை என்றும் இ-பாஸ்போர்ட் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மத்திய அரசு இதுவரை 20,000 இனி இ-பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாகவும் இந்த பாஸ்போர்ட்டுக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து அனைத்து குடிமக்களுக்கும் இனி இ-பாஸ்போர்ட் வழங்கப்படும் என்றும் மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு இது குறித்து நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டது என்பதும் தற்போது இது நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இ-பாஸ்போர்ட்டில் எலக்ட்ரானிக் சிப் ஒன்று இருக்கும் என்றும் அதில் பாஸ்போர்ட் பெறுபவரின் அனைத்து அம்சங்களும் வடிவமைக்கப்படும் என்றும் இந்த இ-பாஸ்போர்ட் முறாஇ போலி பாஸ்போர்ட்களை ஒழிக்க உதவும் என்றும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் பாஸ்போர்ட் எடுப்பவர்களின் அனைத்து ஆவணங்களும் இ-பாஸ்போர்ட்டில் இணைக்கபப்ட்டுள்ள சிப்பில் பதிவு செய்யப்பட்டிருப்பதால் ஆவணங்களை திருட முடியாது என்றும் பாஸ்போர்ட்டில் மோசடி செய்ய முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின்கீழ் இந்தியாவில் உள்ள 36 பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் இனி இ-பாஸ்போர்ட் வழங்கப்படும் என்றும் இ-பாஸ்போர்ட் வழங்குவதற்கான நேரமும் மிகவும் குறைவாக இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புத்தக பாஸ்போர்ட்டில் இருப்பது போலவே அனைத்து அம்சங்களும் இதில் இருக்கும் என்றும் இந்திய இ-பாஸ்போர்ட்டை பொதுமக்களுக்கு வழங்கும் பணியை நாசிக் நகரில் உள்ள ஐஎஸ்பி என்ற நிறுவனம் பெற்று உள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version