இந்தியா

கொரோனா பதிப்பு – தென் மாநிலங்களுக்குக் குறைவான நிதியை ஒதுக்கிய மத்திய அரசு!

Published

on

கொரோனா வைரஸ் தக்குதல்களைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு மாநில அரசுகளுக்குப் பேரிடர் அவசரக் கால நிதியாக 11 ஆயிரத்து 92 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது.

ஆனால் இதில் தென் மாநிலங்களுக்குக் குறைந்த அளவிலான நிதியை மத்திய அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அதிகளவில் கொரோனா வைரஸால் பதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மத்திய அரசு 1,611 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில், இரண்டாம் இடத்தில் உள்ள தமிழ்நாட்டிற்கு 510 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 6வது இடத்தில் உள்ள உத்திரப் பிரதேசத்துக்கு 966 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

179 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கியுள்ள மத்திய பிரதேச மாநிலத்திற்கு 910 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளனர். 32 பேருக்கு கொரோனா தொற்று உள்ள பீகார் மாநிலத்திற்கு 710 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

21 நபர்களுக்கு மட்டுமே கொரோனா தொற்று உள்ள ஒடிசாவுக்கு 810 கோடி ரூபாயும், 210 பேருக்கு கொரோனா தொற்று உள்ள ராஜஸ்தானுக்கு 710 கோடி ரூபாயும் மேற்கு வங்கத்திற்கு 505.5 கோடி ரூபாயும், ஆந்திரப் பிரதேசத்திற்கு 505 கோடி ரூபாயும், தெலுங்கானாவுக்கு 224 கோடி ரூபாயும், கர்நாடகாவுக்கு 395 கோடி ரூபாயும், கொரோனா பதிப்பில் 4வது இடத்திற்கு உள்ள கேரளாவுக்கு157க் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version