இந்தியா

இந்தியாவில் 100 கோடி பேர்களுக்கு தடுப்பூசி: சிறப்பாக கொண்டாட மத்திய அரசு ஏற்பாடு!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி செய்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவுறுத்தியதை அடுத்து கடந்த சில மாதங்களாக மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு லட்சக்கணக்கானவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு கவர்ச்சிகரமான பரிசுகளும் அறிவிக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. தன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று 100வது கோடி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதை அடுத்து சிறப்பு கொண்டாட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

100 கோடி தடுப்பூசி என்ற சாதனையை மத்திய மாநில அரசுகளின் உதவியால் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நூறுகோடி தடுப்பூசி சாதனையை கொண்டாட மத்திய அரசு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பேருந்து, ரயில், விமானம் மற்றும் கப்பல்களில் இந்த அறிவிப்பை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் தேசிய நினைவுச் சின்னங்களில் வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு 100 கோடி தடுப்பூசி கொண்டாட உள்ளதாகவும் 100 கோடி தடுப்பூசி கொண்ட சிறப்பு பாடல் ஒன்றையும் மத்திய அமைச்சர் வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் 100 கோடி தடுப்பு ஊசி செலுத்தப்படுவதை அடுத்து மருத்துவர்களுடன் பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version