இந்தியா

இ-சிகிரெட் விற்பனைக்குத் தடை, மத்திய அரசு அதிரடி!

Published

on

சிகிரெட்டுக்கு மாற்றாகச் சந்தையில் இ-சிகிரெட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே இ-சிகிரெட் பிடிப்பதால் என்ன மாதிரியான பாதிப்புகள் எல்லாம் ஏற்படுகிறது என்றும் மத்திய சுகாதாரத் துறை ஆய்வு செய்து வந்தது.

இந்த ஆய்வில் இ-சிகிரெட் பிடிப்பதன் மூலமும் புற்று நோய் உண்டாகும் அபாயம் உள்ளது தெரியவந்துள்ளதாகவும் எனவே அதனைத் தடை மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இ-சிகிரெட் விற்பனை நடைபெறாதவாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறும் சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் செய்தி சுருள் தளத்துடன் அது குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொள்ளும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுமுக ஆர்வலர்கள் மத்திய அரசால் இ-சிகிரெட்டினை தடை செய்ய முடியும் போது ஏன் சிகிரெட்களைத் தடை செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version