தமிழ்நாடு

புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: மத்திய அரசு அனுமதி!

Published

on

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழகத்திலுள்ள விருதுநகர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், உதகை ஆகிய பகுதிகளில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் மற்றும் உதகை ஆகிய 4 மருத்துவ கல்லூரிகளில் தலா 150 இடங்களில் மாணவர்களைச் சேர்க்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கல்லூரிகளில் சேர்க்கப்படும் புதிய மாணவர்களையும் சேர்த்து தமிழகத்தில் மொத்தம் 1650 மருத்துவ இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் விருதுநகர் கல்லகுறிச்சி ராமநாதபுரம் உதகை உள்ளிட்ட மருத்துவ கல்லூரிகளில் 650 மருத்துவ இடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.

எனவே தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு முதல் கூடுதலாக மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version