தமிழ்நாடு

ஏப்ரல் 11 முதல் அதிகரிக்கும் கொரோனா தடுப்பூசி முகாம்கள்: மத்திய அரசு அறிவிப்பு

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியாவிற்கு ஒரு கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப் உள்பட ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் தமிழகம் உள்பட இன்னும் ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது

இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முதல் நடவடிக்கையாக அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற விழிப்புணர்வையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகின்றன. மார்ச் 1ஆம் தேதி முதல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது

இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தகுதியுடைய 100 பணியாளர்கள் இருந்தால் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் தடுப்பூசி முகாம் நடத்தலாம் என மத்திய அரசு அறிவிப்பு.

seithichurul

Trending

Exit mobile version