இந்தியா

குடியரசு தின விழாவை சிம்பிளாக கொண்டாட மத்திய அரசு முடிவு

Published

on

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக வரும் குடியரசு தின விழாவை எளிமையான முறையில் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா பேரலைக்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ள நிலையில், மீண்டும் இரண்டாவது அலையாக கொரோனா வைரஸ் உருமாறியுள்ளது. பிரிட்டனில் உருவாகியுள்ள இந்த வைரஸ், இந்தியா உட்பட மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், இந்தாணடு குடியரசு தின விழாவை வெகு எளிமையாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக குடியரசு தின விழாவானது ராஜ்பாத்தில் நடைபெறும். ஆனால் இந்தாண்டு அதனை நேஷனல் ஸ்டியேத்தில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல் அணிவகுப்பு தொலைவையும் 8.5 கிமீ இலிருந்து 3.5 கிமீ ஆக குறைக்கப்பட்டுள்ளது. அணிவகுப்பில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இடையே சமூக இடைவெளி அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

பார்வையாளர்களும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே அனுமதிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.  குறிப்பாக 15 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் குடியரசு தின விழாவில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று செய்திகள் வந்துள்ளன.

seithichurul

Trending

Exit mobile version