வேலைவாய்ப்பு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) தேர்வு-2019 வெளியீடு!

Published

on

மத்திய அரசுத்துறைகளில் புவியியல் ஆராய்ச்சியாளர் மற்றும் புவியியலாளர் வேலைக்கு ‘ஜியோ சயின்டிஸ்ட் அண்ட் ஜியாலஜிஸ்ட்’ ஒருங்கிணைந்த தேர்வு-2019 எழுத்துத்தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 106

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. ஜியாலஜிஸ்ட் – 50
2. ஜியோபிசிக்ஸ்ட் – 14
3. கெமிஸ்ட் – 15
4. ஜூனியர் ஹைட்ராலஜிஸ்ட் – 27

வயது: 01.01.2019 தேதியின்படி 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஜியாலஜி, ஜியோபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, ஹைட்ராலஜி மற்றும் துறை சார்ந்த முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.200. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 08.06.2019

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள www.upsc.gov.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப் பை பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.04.2019

author avatar
seithichurul

Trending

Exit mobile version