இந்தியா
மத்திய அரசு அலுவலகங்களுக்கு ஏப்ரல் 14ஆம் தேதி விடுமுறை!
ஏப்ரல் 14ஆம் தேதி பொது விடுமுறை என மத்திய அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது ஏற்கனவே ஏப்ரல் மாதம் அதிகமாக விடுமுறை நாட்கள் உள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 13-ஆம் தேதி தெலுங்கு வருட பிறப்பு, ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் வருடப் பிறப்பு மற்றும் ஏப்ரல் 25ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி என விடுமுறை நாட்கள் இருக்கின்றன.
இந்த நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பொது விடுமுறை என மத்திய அரசு அறிவித்துள்ளது. சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை அடுத்து நாடு முழுவதும் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் ஏப்ரல் 14ஆம் தேதி பொது விடுமுறை என மத்திய அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழகத்தை பொருத்தவரை தமிழ் புத்தாண்டு தின விடுமுறை என்பதால் கூடுதல் விடுமுறை எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் ஏப்ரல் 14ம் தேதி கூடுதல் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.