வேலைவாய்ப்பு

மத்திய அரசு நிறுவனமான பிஆர்ஓ வேலை!

Published

on

மத்திய அரசு நிறுவனமான பிஆர்ஓ என அழைக்கப்படும் எல்லை சாலைகள் கழகத்தில் காலியிடங்கள் 778 உள்ளது. ஓட்டுநர், எலக்டிரீசியன், மெக்கானிக், மல்டி ஸ்கில் ஒர்க்கர் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 778

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: DVRMT – 388
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
மாத சம்பளம்: ரூ.19,900 – 44,400
வயது: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வேலை: Electrician -101
வேலை: Veh Mechanic – 92
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக், எலக்ட்ரீசியன் பிரிவில் சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
மாத சம்பளம்: ரூ.19,900 – 44,400
வயது: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

வேலை: Multi Skilled Worker (Cook) – 197
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.18,000 – 39,900

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், பிசி பிரிவினர் ரூ.50 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை Commandant, GREF Centre, பொது கணக்கு எண் 1182905409-ல் State Bank of India, Khadki Branch Pune-ல் கணக்கில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.bro.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, தெளிவாகப் பூர்த்திச் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்குப் பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Commandant, GREF CENTRE, Dighi Camp, Pune – 411 015

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.bro.gov.in அல்லது http://bro.gov.in/WriteReadData/linkimages/9558409500-Untitled.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 10.07.2019

Trending

Exit mobile version