வணிகம்

லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அரசு ஒப்புதல்!

Published

on

நிதி நெருக்கடியில் சிக்கிய லஷ்மி விலாஸ் வங்கியை, டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த லஷ்மி விலாஸ் வங்கி, வாரா கடன் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கியது. வங்கி திவாலாவதை தடுக்கு உடனடியாக தலையிட்ட ஆர்பிஐ லஷ்மி விலாஸ் வங்கிக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்தது.

வங்கி கணக்கில் எவ்வளவு டெபாசிட் செய்து இருந்தாலும் 25 ரூபாய்க்கும் அதிகமாக எடுக்க முடியாது. யாருக்கும் புதிதாக கடன் வழங்க முடியாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகினர்.

வங்கி கணக்கில் உள்ள பணம் பாதுகாப்பாகத் தான் உள்ளது. வாடிக்கையாளர்கள் அச்சம் அடைய தேவையில்லை என்று ஆர்பிஐ தெரிவித்தது. மேலும் விரைவில் வங்கி நிதி சிக்கலிலிருந்து மீட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பது, மேலும் மூலதனத்தை ஈர்ப்பது போன்ற முடிவுகள் அவற்றில் முக்கியமானவை. அதில் டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

டிபிஎஸ் வங்கியுடன் லஷ்மி விலாஸ் வங்கி இணைந்தால், இந்திய வங்கிகள் வரலாற்றில் முதல் முறையாக வெளிநாடு வங்கியுடன் இணைந்த இந்திய வங்கியாக இது இருக்கும்.

டிபிஎஸ் வங்கி சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வங்கி நிறுவனமாகும். இந்தியாவில் ஆன்லைன் டிஜிட்டல் வங்கி சேவையை டிபிஎஸ் வங்கி வழங்கி வருகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version