இந்தியா

வாராக்கடன் எதிரொலி: 600 கிளைகளை மூடும் முன்னணி வங்கி!

Published

on

இந்தியாவில் செயல்பட்டு வந்த முன்னணி வாங்கிய 600 கிளைகளை மூட இருப்பதாக அறிவித்துள்ளது பயனாளிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

நூறு ஆண்டு பழமையான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 600 கிளைகளை மூட திட்டமிட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு 1594 கிளைகளுடன் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. 2017 ஆம் ஆண்டு ஜூன் முதல் இந்த வங்கி வாராக்கடன் அதிகரிப்பு காரணமாக நஷ்டம் அடைந்து உள்ளது என்பதும் இந்த வங்கியை சீரமைக்கும் நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது .

கடந்த டிசம்பர் மாதம் முடிந்த காலாண்டில் 282 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய போதிலும் 15% வாராக் கடன்களை கொண்டுள்ளதால் இந்த வங்கி நிதி அமைப்பின் தத்தளித்து வருகிறது .

இதனால் வங்கியை மேம்படுத்தும் வகையில் 2023ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 600 கிளைகளை மூடுவது அல்லது வேறு வங்கிகளுடன் ஒன்றிணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

seithichurul

Trending

Exit mobile version