தமிழ்நாடு

தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு நோ! மத்திய அரசு கெடுபிடி!!

Published

on

தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசின் முடிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து வெவ்வெறு கட்டங்களில் ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்கி வந்தது. அந்த வகையில், கொரோனா ஹாட்ஸ்பாட் உள்ள இடங்களில் எப்படி ஊரடங்கு இருக்க வேண்டும், எந்தெந்த வணிக இடங்களில் எவ்வளவு பேர் கூடலாம் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.

இத்தகைய வழிகாட்டுதல்கள் அடங்கிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது ஜனவரி 31 ஆம் தேதி வரையில் அமலில் உள்ளது. ஆனால், அதற்குள்ளாக தமிழக அரசு தரப்பில் வரும் ஜனவரி 14 ஆம் தேதி முதல் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம் என்று அறிவித்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு மத்திய உள்துறை அமைச்சகம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் தமிழக தலைமை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழக அரசு அறிவித்துள்ள இந்த தளர்வானது, மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மீறுவதாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.  மேலும், மத்திய அரசின் வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version