சினிமா செய்திகள்

ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவியாக நடிகை பார்வதி… படத்துக்கு சென்சார் மறுப்பு!

Published

on

நடிகை பார்வதி நடித்த வர்த்தமானம் திரைப்படத்துக்கு சென்சார் போர்டு சான்று அளிக்க மறுத்துவிட்டது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவியாக நடிகை பார்வதி நடிக்கும் திரைப்படம் வர்த்தமானம். இத்திரைப்படத்தை பிரபல தேசிய விருது பெற்ற இயக்குநர் சித்தார்த் சிவா இயக்கி உள்ளார். இந்தத் திரைப்படம் அரசுக்கு எதிரான பல கருத்துகளை பரப்பும் என்பதால் சென்சார் போர்டு இந்த படத்துக்கு ‘நோ’ தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த ஆண்டு ஜவஹர்லால் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த சம்பவங்கள், அது தொடர்பான அரசியல் என அனைத்தும் இந்தப் படத்தில் வெளிப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் பல பிரச்னைகளை உருவாக்கும் என்பதால் இந்தப் படத்துக்கு சான்றழிக்க முடியாது என மறுத்துவிட்டது.

ஆனால், மறு பரிசீலனைக்காக இந்தப் படம் மீண்டும் மும்பை சென்சார் போர்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version