தமிழ்நாடு

மயானத்துக்கு தேடி வந்த டாக்டர் பட்டம்: அரசு வேலை தருமாறு இளைஞர் வேண்டுகோள்!

Published

on

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள ரயில்வே காலனியில் முருகேசன் பஞ்சவர்ணம் தம்பதி வசித்து வருகிறார்கள். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் மயானத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று மகன்கள் இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் குடும்ப வறுமையால் 4 பேர் படிக்காமல் கூலி வேலை செய்து வருகின்றனர்.

கடைசி மகன் சங்கர் பெற்றோருக்கு உதவியாக மயானத்தில் வேலை செய்து வருகிறார். இவர் மயான வேலைகளை செய்துகொண்டே சிவகங்கை அரசு கல்லூரியில் வேதியியல் பட்டமேற்படிப்பு படித்து முடித்துள்ளார். அத்துடன் தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றியதோடு, குழந்தைகளுக்கான இலவச ஓவிய பயிற்சியும் அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் இவரது இந்த மனிதனை சேவையை சமீபத்தில் சென்னை சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. சங்கருக்கு அமுதா என்ற மனைவியும் ரேகா என்ற பெண் குழந்தையும் இருக்கிறார்கள். குடும்பத்தின் முதல் பட்டதாரியான சங்கர், மயானத்தில் உள்ள விளக்கு வெளிச்சத்தில் தனது கல்லூரிப் படிப்பை முடித்ததாகவும், தனது படிப்பிற்கேற்ற வேலையை வழங்கினால் குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் என்றும் சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து சங்கர் அளித்த பேட்டியில் கூறிய போது, ‘இதே மயானத்தில் தான் நான் பட்டப் படிப்பையும் பட்ட மேல் படிப்பையும் படித்தேன். தற்போது இதே மயானத்தில் தான் எனக்கு டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது. எனது படிப்பிற்கேற்ற வேலையை அரசு கொடுத்தால் அந்த அரசு வேலையை உதவியால் நான் என் குடும்பத்தை காப்பாற்றி கொள்வேன். இதற்கு தமிழக முதல்வர் அவர்கள் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் சங்கர் அவர்களின் ஓவியத் திறமையைப் பாராட்டி டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்ட நிலையில் அவரது திறமைக்கேற்ற அரசு வேலையும் கொடுத்து அவருக்கு அவருடைய வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக முதல்வர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version