சினிமா செய்திகள்

வலிமை பெயரில் சிமெண்ட், சானிடைசர்: பிசினஸில் அசத்தும் அஜித் திரைப்படம்!

Published

on

தல அஜித் நடித்து முடித்துள்ள வலிமை திரைப்படத்தின் பிசினஸ் என்னவென்று தெரியாவிட்டாலும் வலிமை பெயரில் ஏராளமான பிசினஸில் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

முதல் கட்டமாக இன்று சட்டமன்றத்தில் பேசிய தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் வலிமை பெயரில் புதிய சிமெண்ட் உற்பத்தி செய்யப்படும் என்றும் அந்த சிமெண்ட் விரைவில் சந்தையில் வியாபாரம் செய்யப்படும் என்றும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசின் டான்செம் நிறுவனம் வலிமை பெயரில் புதிய சிமெண்ட் உற்பத்தி உற்பத்தி செய்ய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு பொது சொத்துக்களை விற்பனை செய்து கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசு பொதுச்சொத்தின் வியாபாரத்தை அதிகரிக்கும் முயற்சியில் உள்ளது உண்மையில் பாராட்டத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள இன்னொரு தகவலின்படி வலிமை பெயரில் சானிடைசர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் அஜித் ரசிகர்களால் இந்த சானிடைசர் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.
உலகிலேயே முதல் முறையாக ஒரு திரைப்படத்தின் பெயரில் சானிடைசர் உற்பத்தி செய்வது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது. இந்த சானிடைசர் விரைவில் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் வலிமை படத்தின் டைட்டில் பிசினஸிலும் சக்கை போடு போடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version