இந்தியா

இனி பிப்ரவரி 14 காதலர் தினம் இல்லை.. விலங்குகள் நல வாரியத்தின் புதிய அறிவிப்பு!

Published

on

இந்தியாவில் இனி பிப்ரவரி 14 காதலர் தினம் இல்லை. பசுக்களை அணைக்கும் தினம் என விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் பிப்ரவரி 14-ம் தேதி வேலண்டைன்ஸ் தினம் என அழைக்கப்படும் காதலர் தினம் கொண்டாடுவது அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது.

அதற்கு பல்வேறு தரப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பிப்ரவரி 14-ம் தேதியைப் பசுக்களை அணைக்கும் தினமாகக் கொண்டாடுங்கள். அப்படிச் செய்யும் பொது பசு மாடுகள் மீது உணர்வு ரீதியாக அன்பு ஏற்படும். வளமும், கூட்டான மகிழ்ச்சியும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#image_title

மேலும் காதலர் தினத்தை விமர்சித்துள்ள விலங்குகள் நல வாரியம் காலப்போக்கில் மேற்கத்தியக் கலாச்சாரத்தின் முன்னேற்றம் காரணமாக வேத மரபுகள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் உள்ளன என்றும் கூறியுள்ளது.

இதற்கு ஒரு பக்கம் வரவேற்பும் சர்ச்சையும் எழுந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் நாங்கள் ஏற்கவே ஜல்லிக்கட்டை அப்படிதான் காளை மாடுகளுடன் கொண்டாடி வருகிறோம் எனவும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

seithichurul

Trending

Exit mobile version