இந்தியா

பங்குகள் விலை அதிகரித்தும் விற்பனை செய்ய முடியாத நிலை: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!

Published

on

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதும் 60 ஆயிரத்துக்கு மேல் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதலீட்டாளர்கள் தாங்கள் வாங்கிய பங்குகளின் விலை உச்சத்தை அடைந்து உள்ளதை அடுத்து பலர் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென இன்று முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

CDSL என்ற சர்வரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முதலீட்டாளர்கள் தங்களுடைய பங்குகளை விற்பனை செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது. பங்குச் சந்தை தரகு வர்த்தக நிறுவனங்கள் இது குறித்து கூறிய போது பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் பங்குகளை இன்று விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது என்றும் இதற்கு CDSLஎன்று அழைக்கப்படும் சர்வர் பிரச்சனை தான் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஒரு முதலீட்டாளர் எத்தனை பங்குகளை வாங்குகிறார்? எந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குகிறார்? என்ற டேட்டாக்களை பதிவு செய்து வைத்திருக்கும் CDSL சர்வரில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும் அதனால் தான் முதலீட்டாளர்கள் தங்களுடைய பங்குகளை விற்க முடியவில்லை என்றும் இந்த பிரச்சனை இன்னும் ஒரு சில மணி நேரங்களில் சரியாகிவிடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

CDSL சர்வர் பிர்ச்சனை காரணமாக பல நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்து இருந்தபோதும், அதை விற்பனை செய்து லாபம் ஈட்ட முடியாத நிலைக்கு முதலீட்டாளர்கள் தள்ளப்பட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version