கிரிக்கெட்

சிசிஎல் 2023: மும்பை ஹீரோக்களை பந்தாடிய சென்னை ரைனோஸ்!

Published

on

சிசிஎல் 2023 கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில் இரண்டாம் போட்டியில், சென்னை ரைனோ அணியும், மும்பை ஹீரோஸ் அணியும் மோதின.

அதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை ஹீரொஸ் முதல் 10 ஓவரில் 94 ரன்களை அடித்தது. முதல் இங்கிஸில் 97 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய சென்னை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களான விக்ராந்த்தும், ரமணாவும் அவுட் ஆகாமலிருந்து 150 ரன்களை அடித்தார்கள்.

Ramana in CCL

விராந்த், ரமணா இருவரும் அரை சதம் அடித்தார்கள். ரமணா சிசிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் புரிந்தார்.

பின்னர் தொடங்கிய இரண்டாவது இன்னிங்சில் மும்பை ஹீரோஸ் அணியினர் 91 ரன்கள் எடுத்தனர்.

10 ஓவரில் 36 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை சென்னை அணி தொடங்கிய போது விஷ்ணு விஷாலும் சாந்தனும் களத்தில் இறங்கினர்.

நிதமானக ஆடிய இவர்கள் 4 ஓவர்கள் முடிவில் 37 ரன்கள் அடித்து சென்னை ரைனோஸ் அணியின் வெற்றிக்கு உதவினார்கள்.

Ashok selvan and Jeeva in CCL

சிறந்த பேட்ஸ்மேன் விருது ரமணாவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த பவுளருக்கான விருது அசோக் செல்வனுக்கு வழங்கப்பட்டது.

ஆட்ட நாயகன் விருது அதிக ரன்கள் மற்றும் 2 விக்கெட்கள் எடுத்த விக்ராந்த்துக்கு வழங்கப்பட்டது. கடைசியாக 2015-ம் ஆண்டு நடைபெற்ற சிசிஎல் தொடரில் ரன்னராக வந்த சென்னை ரைனோஸ் முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. கண்டிப்பாக இந்த முறை சிசிஎல் கோப்பையை சென்னை அணி வெல்ல எல்லா தகுதியும் உள்ளது. அந்த அளவுக்குச் சென்னை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version