இந்தியா

10,12 வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் அறிவிப்பு!

Published

on

நடப்பு கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ 10,12 வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 4 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக இந்த நடப்பு கல்வியாண்டு முழுவதும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்து பொதுத்தேர்வு நடக்குமா நடக்காதா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய பாடத்திட்டமான சிபிஎஸ்இ 10,12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு விவரங்கள் அறிவிக்கப்பட்டள்ளது. ஏற்கெனவே செய்முறைத் தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுத்தேர்வுகளும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறுகையில், மே 4 ஆம் தேதி முதல் ஜூன் 10 ஆம் தேதி வரையில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்றும், அதன் முடிவுகள் ஜூலை 15 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பள்ளிகள் செயல்படாத நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கற்றல், கற்பித்தல் நடைபெற்று வருகின்றன. இப்படியான சூழலில் சிபிஎஸ் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பது பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version